கன்னி ராசிக்கு.. தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்…பொருளாதார நிலை திருப்தி அளிக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று அலைபேசி வழி தகவலால் அனுகூலம் கிட்டும் நாளாகவே இருக்கும். மாற்று இனத்தவர்களின் உதவியால் தொழில் முன்னேற்றத்தை காண்பீர்கள். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். இன்று திருமண சுபகாரிய முயற்சிகள் மேற்கொள்வது சில காலம் தள்ளிவைப்பது நல்லது. புத்திரர்களால் சில மன சஞ்சலங்கள் தோன்றினாலும், பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்துக்கொண்டால் சேமிக்க முடியும் செலவை எப்பொழுதும் போலவே கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

முடிந்த அளவு தேவையில்லாத பொருட்களை தயவு செய்து வாங்க வேண்டாம். இன்று காதலர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். கணவன் மனைவிக்கு இடையே இன்று அன்பு பெருக்கெடுத்து இருக்கும். அதே போல மனைவிக்கு தேவையான பொருட்களையும் வாங்கிக் கொடுக்கக் கூடும். இன்று மாணவச் செல்வங்கள் முயற்சியின் பேரிலேயே கல்வியில் வெற்றி பெற முடியும். கடுமையான முயற்சி மேற்கொள்ளுங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள் ரொம்ப சிறப்பாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நேரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் ஊதா நிறம்