கன்னி ராசிக்கு… செயல்கள் தடையின்றி நிறைவேறும்.. சலுகைகள் கிடைக்கும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று முக்கியமான செயல் தடையின்றி நிறைவேறும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு சலுகைகள் கிடைக்கும். இளமைகால நண்பரை சந்திக்கக்கூடும். இன்று  பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். தொழிலில் சக பணியாளர்களிடம் கொஞ்சம் கவனமாக பழகுவது மட்டும் நல்லது.

பொருளாதார நிலையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ரொம்ப சிறப்பாகவே இன்று இருக்கும். கடன்களும் படிப்படியாக குறையும், புத்திர பாக்கியம் வேண்டுபவர்களுக்கு அழகான புத்திர பாக்கியமும் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். இன்று மாணவர்களுக்கு கல்வியின் மீது அதீத நம்பிக்கையும் ஆர்வமும் ஏற்படும். கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கூடும்.  நல்ல மதிப்பெண்கள் எடுப்பீர்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் உங்களுக்கு ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஊதா நிறம்