
மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நீதிமன்றத்தில் தன்னுடைய கணவர் குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது திருமணம் நடந்த அன்றைய தினம் முதலிரவுக்காக சென்ற அந்த பெண்ணின் கன்னித்தன்மை உடையவரா என்று கணவன் வீட்டினர் சோதித்து பார்த்துள்ளனர்.
முதலிரவு அறையில் நுழைந்து அவர்கள் மிகவும் மோசமான முறையில் கன்னித்தன்மை சோதனை செய்ததாகவும் இதனால் தனக்கு 3 மாதத்தில் மன வேதனை காரணமாக கருசிதைவு ஏற்பட்டதாகவும் அடுத்தது 9 மாதத்தில் சிசு இறந்து பிறந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
கன்னித்தன்மை சோதனை என்பது அறிவியலுக்கு புறம்பானது மற்றும் சட்டப்படி தடை செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண் தனக்கு நியாயம் வேண்டுமென கூறி நீதிமன்றத்தில் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளார்.