கன்னியாகுமரியை நோக்கி.. கூட்டம் கூட்டமாய் படையெடுத்த மக்கள்…!!!

கன்னியாகுமரியில் கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

கடலில் உள்ள விவேகானந்தர் மண்டபம் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்கு சுற்றுலா பயணிகள் படகுகளில் சென்று மகிழ்ந்து வருகின்றனர். இதற்கு இடையே கன்னியாகுமரியில் இருந்து வட்டகோட்டை வரையிலான சொகுசு சுற்றுலா படகு சேவை நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. புதிய சுற்றுலா படகில் நீண்ட தூரம் செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.