கனிமொழிக்கு கொரோனா உறுதி…. வீட்டிலேயே தனிமை – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

நிலையில் திமுக எம்பி கனிமொழி கருணாநிதி உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்டுத்தியுள்ளது. நேற்று வரை திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.