கனவு கோட்டையில் வாழ்கிறார்…. அதான் இப்படி பேசுறாரு…. அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்…!!!

130 நாட்களில் 202 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தொற்றை  தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்தியதை பல்வேறு மாநிலங்களும் பாராட்டி இருப்பதாக தெரிவித்தார். தங்கள் முறைகேடுகளை மறைப்பதற்காக தேவையற்ற, பொருத்தமற்ற குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிசாமி  சேர் வாரி இறைத்து இருக்கிறார்  என்றார்.

அடிப்படையற்ற, ஆதாரமற்ற என கூறி வரும் எடப்பாடி பழனிசாமி, கனவு கோட்டையில் வாழ்கிறார் என விமர்சித்தார். வலிமை சிமெண்ட், சிறந்த சிமெண்ட், சந்தையில்  இருக்கும் எல்லா சிமெண்டுகளுடனும் போட்டியிட கூடியதாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் அவர், நான்கு மாத காலங்களுக்குளாக இந்த ஏற்றுமதி தொகுதியை வெளியிட்டு இருக்கிறோம். இதையெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தெரியவில்லையா? சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நாங்கள் சொல்லி இருக்கக்கூடிய 505  தேர்தல் வாக்குறுதிகளில்  இந்த 130 நாட்களுக்குள்ளாக நாங்கள் 202 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற கூடிய  அறிவிப்புகளையும், அதற்கான  ஆணைகளையும் வெளியிட்டிருக்கிறோம்.

அவர் எந்த அடிப்படையும் இல்லாமல் பேசுகிறார் என்பதற்கு, இதுவே  ஒரு நல்ல உதாரணம்.
அவர் அதற்கு முன்னாலேயே பேசியதற்கு கூடிய குற்றச்சாட்டு, எப்படி அடிப்படை உண்மை இல்லாததோ அதைப்போல இதுவும் அடிப்படையற்ற குற்றச்சாட்டு. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பழக்கமாகி விட்ட ஒன்று என்ற காரணத்தால் அவர் அப்படிப்பட்ட ஒரு கனவு  கோட்டையிலே இருக்கலாம் என்று பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *