கனவில் கூட என்னை நினைத்து…. தூக்கத்தை இழந்து தவிக்கிறார் ஸ்டாலின் – ஈபிஎஸ் கிண்டல்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

அந்தவகையில் முதல்வர் எடப்பாடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், “முதல்வர் ஆகும் கனவில் கூட என்னைப் பற்றி சிந்தித்து கொண்டே  இருப்பதால் தூக்கத்தை இழந்து தவித்து வருகிறார்” ஸ்டாலின் என்று கிண்டல் செய்துள்ளார்.