கனமழை… நாளை (12ஆம் தேதி) இந்த 7 மாவட்டங்களுக்கு விடுமுறை!!

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்திற்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை  விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கனமழை மழை பெய்து வருகிறது.. இதனால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் மாவட்டத்தில் பெய்யும் மழையின் அளவை பொருத்து விடுமுறையளித்து வருகின்றனர்.. இந்த நிலையில் தற்போது வேலூர் மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (12ஆம் தேதி) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே கனமழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (12ஆம் தேதி) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது மேலும் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *