பிலிப்பைன்ஸில் உள்ள மசரா என்ற கிராமத்தில் தங்க சுரங்கங்கள் உள்ளது. இந்த தங்க சுரங்கங்களில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் தங்க சுரங்கத்தில் பணியை முடித்துவிட்டு பேருந்துக்காக காத்திருந்த பணியாளர்களும் கிராம மக்களும் என நூற்றுக்கும் அதிகமானோர் சீக்கி கொண்டனர். இது குறித்த தகவல் அறிந்த மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.

32 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 54 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மண்ணுக்குள் 63 பேர் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாயமானவர்களை தொடர்ந்து தேடும் பணியில் மீட்பு குழு ஈடுபட்டு வருகிறது.