கத்தரிக்காய் விளைச்சல்  அதிகரித்ததால் விலைசரிவு…விவசாயிகள் கவலை !

கத்தரிக்காய் விளைச்சல்  அதிகரித்ததால் மகிழ்ச்சி  அடைந்த விவசாயிகள், விலை  சரிந்ததால்  கவலை அடைந்துள்ளனர் .

கிருஷ்ணகிரி அணையின் மேற்புறம் உள்ள விவசாயிகள் கத்தரிக்காய்,முள்ளங்கி ,  தக்காளி வெண்டைக்காய், ஆகிய  காய்கறிகளை  பயிரிட்டு  வருகின்றனர் . இங்கு  விளைவிக்கப்படும்  கத்தரிக்காய்  ஓசூர் சந்தை  மூலமாக  கேரளா  மட்டுமின்றி  தமிழ்நாட்டின் பல  பகுதிகளுக்கும் கொண்டு  செல்லப்பட்டு  விற்பனை  செய்யபடுகின்றன .

விவசாயிகள்  கத்தரிக்காய் கிலோவுக்கு  20 ரூபாய் கிடைக்கும்  என்று  எதிர்பார்த்தனர் .ஆனால் விளைச்சல்  அதிகமாக  இருப்பதால்  கிலோ 15 ரூபாக்கு   மட்டுமே விற்பனை  செய்யப்படுகிறது .   இதனால்  அவர்கள்  எதிர் பார்த்த  இலாபம்   கிடைக்காமல்  தவிக்கின்றனர்.  இதனை  வெளி மாநிலங்களுக்கு  அனுப்புவதன்  மூலம்  நஷ்டத்தை  சரிகட்டலாம்   என  நம்புகின்றனர் .மேலும்    20  ரூபாய்க்கு  கொள்முதல்  செய்தால்  இலாபம்  ஈட்ட  முடியும் என  கவலையுடன்  கூறுகின்றனர் .