“கதை, திரைக்கதை, வசனம், ஹீரோ என புதிய அவதாரத்தில் யோகி பாபு”…. புதிய பட அப்டேட் ‌…!!!!!

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நாயகனாக களம் இறங்குகின்றார் யோகி பாபு.

தமிழ் சினிமா உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருகின்றார் யோகி பாபு. இவர் தற்பொழுது பல திரைப்படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் யோகி பாபு அவரே ஒரு திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடிகராகவும் நடிக்க உள்ளார்.

இத்திரைப்படத்தை வில் அம்பு திரைப்படத்தை இயக்கிய ரமேஷ் சுப்பிரமணியம் இயக்குகின்றார். தற்பொழுது படத்திற்கு நடிப்பவர்களின் தேர்வு நடைபெற்று வருகின்றது. இன்னும் இத்திரைப்படத்திற்கு பெயரிடவில்லை. இந்த நிலையில் திரைப்படத்தின் பூஜையானது சென்னையில் எளிய முறையில் நடைபெற்று உள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.