புனேவில் சிறுமியின் மீது கதவு விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிறுவன் ஒருவன் கதவை அடைத்துக் கொண்டிருக்கிறான். அப்போது அந்த கதவு எதிர்பாராத விதமாக சிறுமியின் மீது விழுந்தது. அந்த சிறுமியின் பெயர் கிரிஜா ஷிண்டே (3) என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிறுமியின் மீது கதவு விழுந்தவுடன் பயந்து போன சிறுவர்கள் ‌ அச்சத்தில் பெற்றோர்களை அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக இறந்துவிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.