கண் பார்வை இழந்த மாணவி… “பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை”… காவல் நிலையத்தில் பாராட்டு விழா…!!!!

கண் பார்வை இழந்த மாணவி பிளஸ் 2 தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றதால் காவல் நிலையத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட எல்லைபாறையை சேர்ந்த மாணவி யோகலட்சுமி. இவர் உடல்நலக்குறைவால் கண் பார்வை இழந்தார்‌. இவருக்கு நிதி வழங்கக் கோரி சட்டசபையில் வலியுறுத்தப்பட்டு பின் அமைச்சர்கள் பலர் மாணவியை நேரில் சென்று பார்த்தார்கள். இதையடுத்து மாணவியின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் ஆர்.காந்தி மாணவியின் மேற்படிப்புக்கு உதவி செய்வதாகக் கூறினார்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர், எம்எல்ஏ, ஒன்றிய குழு தலைவர் உள்ளிட்டோர் மாணவிக்கு பண உதவி செய்து வந்தார்கள். இந்நிலையில் பிளஸ் டூ தேர்வு எழுதி மாணவி யோகலட்சுமி 443 மதிப்பெண் பெற்றுள்ளார். கண் பார்வை இழந்த போதிலும் 443 மதிப்பெண் பெற்றதால் பலர் மாணவிக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் சோளிங்கர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *