கண்ணிமைக்கும் நேரத்தில்… தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

திண்டுக்கல் அருகே தொழிலாளி ஒருவர் சாலையை கடக்க முயன்ற போது வாகனம் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே நரசிங்கபுரத்தில் நல்லதம்பி (52) என்பவர் வசித்து வந்தார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு வேலை காரணமாக சென்றுள்ளார். அதன்பின் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு நடந்தது சென்றுள்ளார்.

அப்போது திண்டுக்கல்-மதுரை சாலையை அவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக நல்ல தம்பியின் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதில் நல்ல தம்பி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த விபத்து குறித்து திண்டுக்கல் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.