கண்ணா இது ஆரம்பம்தான்… இன்னும் நிறைய இருக்கு… வெயிட் பண்ணி பாருங்க… கடம்பூர் ராஜு…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு ஆரம்பகட்ட அறிவிப்பு தான், இன்னும் போகப்போக பல்வேறு திட்டங்களை அரசு அறிவிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடந்தது. அதில் தேசிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், “இந்தப் பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் 2500 ரூபாய் குடும்பங்களுக்கு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் எதிர்க்கட்சியினர் இருக்கிறார்கள். இது ஒரு ஆரம்ப கட்ட அறிவிப்பு மட்டுமே. வரும் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்ள இடைப்பட்ட காலங்களில் பல்வேறு புதிய திட்ட அறிவிப்புகளை அரசு வெளியிடும்.

அதனால் மக்களுக்கு நல்லாட்சி கொடுத்து வருகிற அதிமுக அரசே மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும். அதனால் திமுக வெற்றி பெறாமல் இருப்பது நல்லது. நடிகர் கமல்ஹாசன் அரசியலில் தடம் பதிக்க போவதில்லை. அவர் சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார். ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறினாரல் அது உண்மையாகி விடும் என்று அவர் கருதுகிறார். கமல்ஹாசன் மட்டுமல்ல அதிமுக அரசின் மீது யார் குறை கூறினாலும் அதற்கு கட்சி தொண்டர்கள் தக்க பதில் கொடுப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.