கண்ணாடி உடைத்ததை தட்டி கேட்ட கல்லூரி மாணவர்….. லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம்….. கோர விபத்து….!!!

கல்லூரி மாணவர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள நத்தம்பாக்கம் வேல்நகர் பகுதியில் நேதாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்ராஜ்(22) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நசரத்பேட்டையில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மோகன்ராஜ் தனது குடும்பத்தினருடன் வேலூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் நத்தம்பாக்கம் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த லாரி காரின் வலது பக்க கண்ணாடியை உடைத்து விட்டு நிற்காமல் சென்றதால் கோபமடைந்த மோகன்ராஜ் காரை வேகமாக இயக்கி புதுப்பேடு அருகே லாரியை மடக்கி நிறுத்தினார். இதனை அடுத்து லாரி ஓட்டுநரான கார்த்திகேயன் என்பவரை மோகன்ராஜ் தட்டி கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மோகன்ராஜ் லாரியில் ஏறி கார்த்திகேயனை அடிக்க முயன்றபோது அவர் வாகனத்தை முன்னோக்கி இயக்கியுள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த மோகன்ராஜ் திடீரென கீழே விழுந்து லாரியின் சக்கரத்தில் சிக்கி பெற்றோர் கண்முன்னே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மோகன் ராஜின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தப்பி ஓடிய கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.