“கண்டங்கள் கடந்து பரவிய புகழ்”…‌ கனடாவில் விஜய் ரசிகர்கள் செய்த உதவி… புகழ்ந்து தள்ளிய மேயர்…. வைரல் வீடியோ…!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் தற்போது நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு நடிகர் விஜயின் ரசிகர்கள் ரத்ததானம், கண் தானம் போன்ற பல்வேறு விதமான நலத்திட்ட பணிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் கனடா நாட்டிலும் பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.

குறிப்பாக கனடாவில் ரத்த தானம் மற்றும் உணவு வழங்குதல் போன்ற பல்வேறு சமூக நலப் பணிகளை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகிறார்கள். இந்த சமூக நல சேவைக்காக கனடா நாட்டின் ஒண்டோரியோ மாகாணத்தின் மேயர் மரியன்னே மீட் வார்ட் நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் கண்டம் கடந்து விஜயின் புகழ் பரவி உள்ளதை தற்போது விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

Leave a Reply