கணவர்களே…. உங்க மனைவிக்கு ரூ.50,000 கிடைக்கணுமா?… அப்போ உடனே இத மட்டும் பண்ணுங்க போதும்….!!!

திருமணமான அனைவருக்கும் தங்கள் இறுதி காலத்தை நினைத்து கவலையாக இருக்கும்.தங்களுடைய இறப்புக்கு பிறகு மனைவிக்கு கடைசி காலத்தில் யார் உதவி செய்வார்கள் என்று கட்டாயம் யோசிப்பீர்கள். எதிர்காலத்தில் உங்கள் மனைவி யாரையும் சார்ந்திருக்காமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நீங்கள் தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதற்காக உங்கள் மனைவி பெயரில் தேசிய பென்ஷன் திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். இதன் மூலமாக உங்கள் மனைவிக்கு 60 வயதை எட்டியதும் மொத்த தொகை வழங்கப்படும். அதனுடன் அவர்கள் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் என்ற பெயரில் நிலையான ஒரு வருமானத்தை பெற்று வருவார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் கடைசி காலத்தில் உங்கள் மனைவிக்கு மாதம்தோறும் எவ்வளவு பென்ஷன் கிடைக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். உங்களின் வசதிக்கு ஏற்ப இந்த திட்டத்தில் பணத்தை டெபாசிட் செய்யலாம். வெறும் ஆயிரம் ரூபாயில் கணக்கு தொடங்கலாம். NPS கணக்கு 60 வயதில் முதிர்ச்சி அடைகிறது. நீங்கள் விரும்பினால் 65 வயது வரை இந்த கணக்கை நீட்டிக்கும் வசதியும் இதில் உண்டு. இதற்கு உதாரணமாக உங்களுடைய மனைவிக்கு தற்போது 30 வயது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

அவருடைய தேசிய பென்ஷன் திட்டம் கணக்கில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் 10 சதவீத வருமானத்தில் அவரது 60 வயதில் மொத்தம் 1.12 கோடி ரூபாயை அவரது கணக்கில் மொத்தமாக இருக்கும். அதில் அவருக்கு சுமார் 45 லட்சம் கிடைக்கும். இதனைத் தவிர ஒவ்வொரு மாதமும் 45 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வர தொடங்கும். இந்த பென்ஷன் தொகையை வாழ்நாள் முழுவதும் அவர்கள் தொடர்ந்து பெற முடியும். எனவே உடனே இந்தத் திட்டத்தில் இனைந்து பயன்பெறுங்கள்.