கணவரை தீர்த்து கட்டிய மனைவி…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…. போலீஸ் நடவடிக்கை…..!!!!

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் 4வது வட்டம் புண்ணாக்கு தெருவிலுள்ள என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வந்தவர் நாராயணன் மகன் சண்முகம் (50). இவர் என்.எல்.சி. 1வது சுரங்கத்தில் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நிர்மலா(எ)ஷகிலா(48) என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களில் மூத்தமகளுக்கு திருமணம் நடைபெற்று, அவர் விஜயவாடாவில் வசித்து வருகிறார். 2வது மகள் மற்றும் மகன் சேலத்திலுள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். இதில் 2-வது மகள் நாமக்கல்லிலுள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ பயின்று வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகத்திடம் அவருடைய மனைவி ஏன் என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை என கேட்டுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையில் தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து சண்முகம் வீட்டுக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஷகிலா வீட்டுக்கு வெளியே நின்ற ஆம்னி வேனில் படுத்து உறங்கினார். அதன்பின் நேற்று காலை பணிக்கு போகவேண்டிய சண்முகம் வீட்டின் கதவை திறக்காமல் இருந்தார். இதனை பார்த்த அவருடைய மனைவி கதவை தட்டியபோதும் சண்முகம் கதவை திறக்கவில்லை. உடனடியாக ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது அங்கு வீட்டின் உள்ளே சண்முகம் வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஷகிலா உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி துணைபோலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு கழுத்து, கை உள்ளிட்ட பல பகுதிகளில் வெட்டுக்காயங்களுடன் சண்முகம் இறந்துகிடந்தார்.

இதன் வாயிலாக அவரை மர்மநபர்கள் கொலை செய்திருப்பது தெரியவந்தது. அத்துடன் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அப்போது கொலை நடந்த வீட்டிலிருந்து மோப்பம் பிடித்தபடி அந்நாய் சிறிதுதூரம் சென்று நின்றது. மேலும் தடவியல் நிபுணர்கள் நேரில்வந்து வீட்டில் பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அதன்பின் சண்முகம் உடலை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சண்முகத்தின் அண்ணன் பிச்சையாபிள்ளை கொடுத்த புகாரின்படி சந்தேக மரணம் என காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கடலூர் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஷ்ணுபிரியா, நகர போலீசார், டெல்டா பிரிவு காவல்துறையினர் கொலையாளிகள் யார் என்பது பற்றி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனிடையில் சண்முகம் கொலை செய்யப்பட்ட வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தாலும், வீட்டின் பின்பக்க கதவை திறந்து எளிதில் உள்ளே வந்துவிட முடியும். ஆகவே இதை அறிந்த மர்ம நபர்கள் தான் உள்ளே புகுந்து சண்முகத்தை கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். அந்த வகையில் முதலாவதாக சண்முகத்தின் மனைவி ஷகிலா மீது காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஷகிலாவை காவல் நிலையம் அழைத்துசென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, சண்முகத்துக்கும், சுகந்தி என்ற பெண்ணுக்கும் இடையில் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதன் காரணமாக சண்முகம் தான் வாங்கும் சம்பளத்தை அப்பெண்ணிடம் கொடுத்து வந்துள்ளார். இதனால் தன் குடும்பத்தை அவர் சரியாக கவனிக்கவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையில் சண்முகத்தின் 2வது மகளும், நெய்வேலி 9வது வட்டத்தை சேர்ந்த தங்கப்பன் மகன் தமிழ்வளவன் (21) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரமானது தாய் ஷகிலாவுக்கு தெரியும்.

இருப்பினும் சண்முகத்துக்கு தெரியாது. எனவே மகளின் காதல் பற்றி அவருக்கு தெரிய வந்தால் எதிர்ப்பு தெரிவித்து இடையூறாக இருப்பார் என ஷகிலா எண்ணினார். இதற்காக ஷகிலா அவரை தீர்த்துக்கட்ட முடிவுசெய்து, இதுபற்றி மகளின் காதலனான தமிழ்வளவனிடம் தெரிவித்தார். அதன்படி ஷகிலா தமிழ்வளவனுக்கு போன்செய்து வீட்டுக்கு வர வைத்துள்ளார். அதன்பின் நள்ளிரவில் ஷகிலாவும், தமிழ்வளவனும் சேர்ந்து சண்முகத்தை வெட்டி கொலை செய்துவிட்டு, பின்பக்க வாசல் வழியே வெளியே வந்துவிட்டனர். மறுநாள் காலையில் ஷகிலா தனக்கு எதுவும் தெரியாதது போல நாடகமாடி காவல்துறையினரை ஏமாற்ற முயன்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஷகிலா, தமிழ்வளவன் போன்றோரை காவல்துறையினர் கைது செய்தனர். இறுதி வரையில் மகளின் காதல் விவகாரம் தொடர்பாக சண்முகம் தெரிந்து கொள்ளாமலே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதில் சண்முகம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் பொருளாளராகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *