கணவரை கண்டித்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

ஓட்டுநர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வேலகவுண்டம்பட்டியில் மினி லாரி ஓட்டுநரான கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள்மொழி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணனை அருள்மொழி கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் தம்பதியினருக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த கிருஷ்ணன் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *