“கணவரை அடித்துக் கொலை செய்த மனைவி”… தற்கொலை என நாடகம்…. போலீசார் விசாரணையில் தெரியவந்த உண்மை…!!!!

கணவரை அடித்துக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவி மற்றும் கொலையை மறைத்த மகன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே இருக்கும் கீழக்கரை கிராமத்தில் வாழ்ந்து வந்தவர் சக்திவேல். இவரின் மனைவி வசந்தா. இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருக்கின்றனர். கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடலில் தீக்காயங்களுடன் வீட்டின் அறையில் சக்திவேல் தற்கொலை செய்து கொண்டதாக அவரின் மனைவி கூறியுள்ளார். இதையடுத்து உறவினர்கள் இறுதி சடங்கு செய்வதற்காக சுடுகாட்டிற்கு சென்றுள்ளனர். இவரின் மரணம் குறித்து சந்தேகம் அடைந்த கிராம நிர்வாக அலுவலர் புகழ்வேந்தன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து போலீஸார் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சக்திவேலுக்கும் அவரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினமும் இதுபோலவே தகராறு ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் ஆத்திரமடைந்த வசந்தா அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு துணியை மேலே போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளார். பின் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உறவினர்கள், அக்கம் பக்கத்தினரை ஏமாற்றி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சக்திவேலின் மகன் ரூபன் கொலை சம்பவத்தை மறைத்துள்ளார். இதனால் போலீஸார் வசந்தாவையும் ரூபனையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *