ஒரே என்ஜாய் தான் போல… பிரபல நடிகையின் கலர்ஃபுல் புகைப்படம்… கணவருடன் களைகட்டிய ஹோலி கொண்டாட்டம்…!!!

நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் ஹோலி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் காஜல் அகர்வால் தொழிலதிபர் கவுதம் கிச்சுலுவை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் காஜலுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. தற்போது இவர்  ஹே சினாமிகா, இந்தியன்2, ஆச்சார்யா, பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர் தனது ரசிகர்களுக்காக ‘இந்த ஹோலி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அன்பை தரட்டும். நல்ல எண்ணங்களையும் நல்ல ஆரோக்கியத்தையும் தரட்டும்’ என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்திற்கு 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.