கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. 2 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!

2 குழந்தைகளுடன் காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொளஞ்சியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி(35) என்ற மகள் உள்ளார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆர்த்திக்கும், தாமோதரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு விஷ்வாணிஸ்ரீ(10), அக்ஷிதாஸ்ரீ(6) என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக ஆர்த்தி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் ஆர்த்தி தனது 2 குழந்தைகளுடன் திடீரென காணாமல் போய்விட்டார். இதுகுறித்து அவரது தாய் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *