கணவரின் ஏமாற்று வேலை…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புஞ்சை கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி(37) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாமரைச்செல்வி(26) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு வேலைக்கு பணம் கட்ட வேண்டும் எனக் கூறி கிருஷ்ணமூர்த்தி தாமரைச்செல்வியின் 8 பவுன் தங்க நகையை அடகு வைத்துள்ளார். மேலும் அவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தாமரைச்செல்வியை சரியாக கவனிக்கவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த தாமரைச்செல்வி தனது வீட்டிற்குப் பின்புறம் இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து தாமரை செல்வியின் தந்தை விநாயகம் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *