ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியதைப் பாதுகாக்கவும், 60 வயதிற்கு மேல் சிறப்பான ஓய்வூதிய பலனை பெற வேண்டும் என்பதற்காகவும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) என்கிற ஒரு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 60 வயது பூர்த்தியடைந்தவர்கள் சேர்ந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தில் சேருவதற்கு அதிகபட்ச வயது வரம்பு எதுவும் கிடையாது. மேலும், PMVVY திட்டத்தின் பாலிசி காலம் 10 ஆண்டுகளாகும்.

மேலும், சந்தாதாரருக்கு ஓய்வூதியம் காலாண்டு, அரையாண்டு மற்றும் ஒரு ஆண்டின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டு வருகிறது. குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ரூ 1,000, காலாண்டு அல்லது 3 மாதங்களுக்கு ரூ 3,000, அரையாண்டு அல்லது 6 மாதங்களுக்கு ரூ 6,000மும் மற்றும் ஒரு ஆண்டிற்கு குறைந்தபட்சமாக ரூ.12,000 செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அதிகபட்ச மாதாந்திர ஓய்வூதியமாக ரூ 9,250, காலாண்டு அல்லது 3 மாதங்களுக்கு 27,750, அரையாண்டு அல்லது 6 மாதங்களுக்கு 55,500மும் மற்றும் ஒரு ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூ 1,11,000 செலுத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டத்தின் கீழுள்ள பிரீமியத்தின் மொத்தத் தொகை ரூ.15 லட்சத்திற்கு அதிகமாக இருக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, மாதாந்திர ஓய்வூதியத்திற்கு 7.4% வட்டி வழங்கப்படும் எனவும், காலாண்டு ஓய்வூதியத்திற்கு 7.45% வட்டி வழங்கப்படும் எனவும், அரையாண்டு ஓய்வூதியத்திற்கு 7.52% வட்டி வழங்கப்படும் எனவும், வருடாந்திர ஓய்வூதியத்திற்கு 7.66% வட்டி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 ஆண்டு பாலிசி முடிந்த பிறகு கடன் வாங்கிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. கணவன்-மனைவி இருவரும் இந்த திட்டத்தில் இணைய விரும்பினால் இருவருமே இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.