உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சத்ய பால் (40) மற்றும் காயத்ரி தேவி (35) தம்பதியினருக்கு சமீப காலமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இன்று வழக்கம் போல இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் காயத்ரி தன்னுடைய கணவனை செங்கலால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் கொலை செய்த பிறகு போலீஸ் கண் முன்ரே கணவனின் மார்பு மீது ஏறி தலையை கல்லால் பிளந்து மூளையை வெளியே எடுத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த பயங்கரமான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.