இப்படி நடக்கும்னு எதிர்ப்பார்க்கல…. கலவை எந்திரத்தில் சிக்கிய கை…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!!

அரியலூர் மாவட்டத்தில் கட்டிட பணியின் போது கான்கிரிட் எந்திரத்தில் கை சிக்கி  பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்திலுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி வேலைப் பார்க்கும் அஞ்சம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் அஞ்சம்மாள் அதே பகுதியில் ராஜலட்சுமி என்பவரின் வீட்டிற்கு  கட்டிடம் கட்டும் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது காங்கிரிட் பணி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து  கான்கிரிட் பணி முடிந்த பின்னர் அஞ்சம்மாள் கான்கிரிட் கலவை இயந்திரத்தில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது கான்கிரீட் கலவை எந்திரத்தை இயக்க நிலையில் வைத்து அவருடைய கையை உள்புறமாக  விட்டு சாக்கு வைத்து  சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது கை எந்திரத்தின் உள்ளே சிக்கியதில் கை முழுவதும் படுகாயமடைந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  பணியாளர்கள் படுகாயமடைந்த அஞ்சமாளை அருகில்உள்ள அரசு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அங்கு அஞ்சமாளை பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.