கடையில் வாங்கிய பக்கோடா… ரத்தத்துடன் இருந்த பேண்டேஜ்… போலீஸ் விசாரணை…!!

கடையில் இருந்து வாங்கிய காலிஃப்ளவர் பக்கோடாவில் ரத்தத்துடன் பேண்டேஜ் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் உள்ள சி.டி.எச் சாலையில் சூப்பர் மார்க்கெட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து வாடிக்கையாளர் ஒருவர் காலிஃப்ளவர் பக்கோடா வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்று அதை பிரித்து பார்த்த போது மெடிக்கல் பேண்டேஜ் ஒன்று ரத்தத்துடன்இருந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அங்கிருப்பவர்கள் உரிய பதில் அளிக்காததால் அந்த வாடிக்கையாளர் ரத்தத்துடன் இருந்த பேண்டேஜை எடுத்துக்கொண்டு திருநின்றவூர் காவல் நிலையத்திலும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *