கடைக்கு சென்ற பெண்…. மர்ம நபர்கள் செய்த வேலை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்திலுள்ள ஆர்.எம்.எஸ் காலனி 3-வது வீதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயா தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் விஜயாவை பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து விஜயா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *