கடைக்கு சென்ற சிறுவன்….. தனியாக அழைத்து தொந்தரவு அளித்த உரிமையாளர்….. போலீஸ் அதிரடி…!!

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை நேரு நகரில் அபூபக்கர்(48) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அபூபக்கரின் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக 13 வயது சிறுவன் சென்றுள்ளான். அப்போது சிறுவனை கடைக்குள் அழைத்து சென்று அபூபக்கர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அவரிடமிருந்து தப்பித்து ஓடி வந்த சிறுவன் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அபூபக்கரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *