நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சின்ன முதலைபட்டியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்ற பிளஸ் டூ மாணவி மீது டிப்பர் லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த மாணவி திருவிழாவில் கலந்து கொள்வதற்காக உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து கடைக்கு சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் டிப்பர் லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரித்த போது அவர் கஞ்சா போதையில் இருந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.