கடைக்கு சென்ற உரிமையாளர்…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை…!!

4 1/2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சாத்தான் கரையில் பக்ருதீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குளச்சல் பீச் ரோட்டில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து பக்ருதீன் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த 4 1/2 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் காணாமல் போனதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து பக்ருதீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *