கடுமையான பொருளாதார நெருக்கடி…. பணவீக்கம் 60% உயர்வு…. நிதி மந்திரி திடீர் ராஜினாமா…!!!

பிரபல நாட்டில் நிதி மந்திரி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அர்ஜெண்டாவில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு பணவீக்கம் 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் உணவு பொருள்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை அதிபர் ஆல்பெர்ட்டோ பெர்னாண்டஸ் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் நிதி மந்திரி மார்ட்டின் குஸ்டாவ் தன்னுடைய பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இவர் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவரிடம் கொடுத்துள்ளார். மேலும் அரசு தரப்பில் மார்ட்டின் குஸ்டோவின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு கிடைக்காததால் அவருடைய பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.