நாட்டில் வட மாநிலங்களில் பொதுவாக கர்வா சௌத் பண்டிகை கொண்டாடப்படும். அதாவது திருமணமான பெண்கள் தங்கள் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்பதற்காக சூரிய உதயம் முதல் இரவில் சந்திரன் உதயம் வரை விரதம் இருப்பார்கள். கணவன்மார்களும் மாலை நேரங்களில் தங்கள் மனைவிக்காக விரதம் இருப்பார்கள். அந்த வகையில் கடந்த 20 ஆம் தேதி இந்த பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்நிலையில் அந்த நாளில் பீகாரைச் சேர்ந்த ஒரு முதியவர் கர்வா சவுத் விரதம் இருந்தார்.

அவர் முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிபா நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று விரதம் இருந்துள்ளார். மியா கலிபா புகைப்படம் முன்பாக முதியவர் விரதத்தை முடித்துக் கொண்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிலர் பொழுது போக்கிற்காக எடுக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்கிறார்கள். மேலும் சிலர் இதை இந்துமத பண்டிகைகளை புண்படுத்துவது போல் இருக்கிறது என்றும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.