கடல் அரிப்பினால் பாதிக்கப்படும் மீனவ கிராமங்கள்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை…!!!

மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள உவரி அருகே 9 கிராமங்களில் வசிக்கும் மக்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த பகுதிகளில் இயற்கை சீற்றம் மற்றும் கனமழையின் காரணமாக அடிக்கடி கடல் அரிப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக மீனவர்கள் தங்களுடைய படகுகளை கூட நிறுத்த முடியாமல் மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து கடற்கரையின் ஓரத்தில் அமைந்துள்ள மிக்கேல் ஆண்டவர் ஆலயமும் கடல் அரிப்பினால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருக்கிறது.

இந்த பிரச்சனைகளை கடந்த 10 வருட காலமாக பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே அதிகாரிகள் தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மீனவ மக்களின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக தூண்டில் வளைவு அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.