விசைப்படகு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க சொல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டலம் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 14-ஆம் தேதி மீன் பிடிக்க சென்ற சுதர்சனின் படகு நடுக்கடலில் மூழ்கியது. அதிலிருந்து மீனவர்கள் பிரசாந்த், ஹனிபா இருவரும் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மீனவர்கள் சதக் அப்துல்லா, ஆரோக்கியம் ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.

கயல் ரகுமான் என்ற மீனவரின் உடலை மரைன் போலீசார் தேடி வந்தனர். இதை அடுத்து கடலில் மூழ்கிய உயிரிழந்த மூன்று மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க கோரி மண்டபம் விசைப்படகு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.