கடந்த 10 வருஷமா இத செய்யிறோம்…. அதுக்காக நான் பாடுபடுவேன்…. அ.தி.மு.க வின் தீவிர பிரச்சாரம்….!!

தேனியில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் அனைத்து வேட்பாளர்களும் அவர்களது தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனி மாவட்ட பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பாக எம்.முருகன் வேட்பாளராக போட்டியிட்டுள்ளார். இந்நிலையில் அவர் அதிமுக கட்சியின் கூட்டணி நிர்வாகிகளுடன் பெரியகுளம் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றார்.

மேலும் இவர் வடக்கம்பட்டி, நாகபட்டி உட்பட சில கிராமங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அரசு கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்களை ஏழை மக்களுக்கு செய்து வருகிறது என்றும், அனைத்து பகுதியிலும் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டிற்கு பாடுபடுவேன் என்றும் கூறியுள்ளார்.