தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் தினசரி குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

கொலை, கொள்ளை, மது பழக்கவழக்கம் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்றவைகள் அதிகரிக்கும் நிலையில் கடந்த ஆண்டை விட இந்த வருடம் 52% அளவுக்கு குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இதற்கு மாநில அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழ்நாடு அரசு குற்ற சம்பவங்களை தடுக்க கவனம் செலுத்த வில்லை. மேலும் அண்ணாமலைக்கு விரைவில் பாஜக மேலிடம் புதிய பொறுப்பு வழங்கும் என்று கூறினார்.