கடத்திட்டு போய்ட்டாங்க…. கண்ணுல காட்டல…. கணவர் வீட்டின் முன் பெண் செய்த காரியம்…. திண்டுக்கல் அருகே சோகம்….!!

திண்டுக்கல் அருகே காதல் கணவன் வீட்டில் காதல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நாகல் நகரைச் சேர்ந்த 28 வயதான ரம்யா, சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியுள்ளது. இருவரும் இரண்டரை ஆண்டுகள் காதலித்து வந்தனர். இந்நிலையில் அவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இதனையடுத்து அசோக்கின் பெற்றோர்கள் அவருக்கு வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்தனர். அதனை ஏற்க மறுத்து விட்டு அசோக் ரம்யாவை திருமணம் செய்துகொண்டு சென்னையில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் அசோக்கின் உறவினர்கள் இருவர் சென்னைக்கு வந்து அவருடைய தந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறி அவரை ரெட்டியார் சத்திரத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து ரெட்டியார் சத்திரத்தில் உள்ள கணவன் வீட்டிற்கு சென்று விசாரித்தபோது அவருடைய பெற்றோர்கள் அசோக்கை கண்ணில் காட்டாமல் மறைத்து வைத்து நாடகமாடினார். மேலும் ரம்யாவை மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரம்யா கடந்த மாதம் 14ம் தேதி போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியாவிடம், காதல் கணவரை சேர்த்து வைக்க கோரி மனு கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ரம்யா அசோக்கின் வீட்டிற்கு சென்று தனது கணவரை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு அசோக்கின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை கடுமையாக திட்டி உள்ளனர். இதனால் மனம் உடைந்த ரம்யா கணவன் வீட்டின் முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் கணவன் வீட்டின் முன் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *