கடகம் ராசிக்கு… வியாபார போட்டிகளை சந்திக்க கூடும்.. வீண் வம்புக்கு செல்லாதீர்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று வீண் வம்புக்கு செல்லாமல் இருப்பது ரொம்ப நல்லது. பெண்களால் விரைய செலவுகள் கொஞ்சம் கூடும். புதிய பொருட்கள் தேவைப்பட்டால் மட்டுமே வாங்க வேண்டும். வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் இன்று நிகழும். இன்று தொழில் வியாபாரம் செய்பவர்கள் நிறைய போட்டிகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் உறவினர் வகையில் இருக்கும் பெரிய முதலீடுகள் செய்ய நினைக்கும் காரியங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகளிடையே ஒற்றுமை குறைவு உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மிகவும் சிறப்பாகவே இருக்கும். ஓரளவே இன்று முன்னேற்றம் காணும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள்.

மனம் நிம்மதியாக இருக்கும். காரியத்தை செய்யும் பொழுது நிதானமாகவும் திட்டமிட்டும் செய்வது ரொம்ப நல்லது. அலட்சியம் கொள்ள வேண்டாம். இன்று சுபகாரியப் பேச்சுகள் இல்லத்தில் நடந்தால் ஓரளவு வெற்றி பெறும். திருமண முயற்சியிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும். அதே போல தொழிலை பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை. சுமுகமாக செல்லும், நல்ல முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் புதிய முயற்சிகள் மட்டும் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். இன்று மாணவச் செல்வங்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். கல்வியில் அவர்களுக்கு ஆர்வம் அதிகமாகவே இருக்கும். நல்ல வெற்றி வாய்ப்புகளும் அவர்கள் பெறக்கூடும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்