கடகம் ராசிக்கு..பெரியோரின் ஆலோசனை நல்வழி கொடுக்கும்.. வெற்றிகள் வந்து சேரும்..!!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று பெரியோரின் ஆலோசனை உங்களுக்கு நல்வழியை கொடுக்கும். வெற்றிகள் வந்து சேரும். மனதில் மகிழ்ச்சி உருவாகும். குழந்தைகளின் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவியின் உதவியால் தன்னம்பிக்கை கூடும். இன்று பிரச்சனைகளில் தலையிடுவது மட்டும் தவிர்க்கவும். யாருக்கும் பஞ்சாயத்துகள் ஏதும் செய்ய வேண்டாம். பணி நிமித்தமாக பயணங்கள் செல்ல வேண்டி இருந்தால் கொஞ்சம் தள்ளிப் போடுங்கள், ரொம்ப நல்லபடியாகவே இருக்கும்.

உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து செல்ல நேரிடும் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படும் தான் வந்து சேரும். திருமண சுபகாரிய முயற்சிகளுக்கு பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது இன்று  ரொம்ப நல்லது. காதலர்களுக்கு கொஞ்சம் இன்றைய நாள் கடினமாகவே இருக்கும். இன்றைய நாள் கடினமாக இருப்பதால் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடாமல் இருங்கள். கொஞ்சம் விலகி இருப்பது ரொம்ப நல்லது.

இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், சிறப்பாகவே இருக்கும். உங்களுடைய மனமும் அமைதியாகவே இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *