கடகம் ராசிக்கு… துணிச்சலாக எதையும் செய்வீர்கள்..தீட்டிய திட்டங்கள் வெற்றியாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று துணிச்சலாக காரியங்களை நீங்கள் எதிர்கொள்வீர்கள். சுப விரயங்கள் ஏற்படும் நாளாகவே இருக்கும். துணிந்து எடுத்த முடிவு தொழில் வளர்ச்சி கூடும். வருங்கால நலன்கருதி தீட்டிய திட்டங்கள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் குதூகலம் இருக்கும். உத்தியோக உயர்வு எதிர்பார்த்தபடி வந்து சேரும். இன்று கணவன் மனைவிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும். பண வரவுகள் தாராளமாக அமைவதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நினைத்த காரியங்கள் நிறைவேற கூடிய நாளாகத்தான் இன்றைய நாள் உங்களுக்கு இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக தான் உழைக்க வேண்டி இருக்கும், கவலை வேண்டாம். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு சிறப்பாகவே இருக்கும். உள்ளம் மகிழ்ச்சியாகவே இன்று காணப்படும், ஆனால் மிக முக்கியமாக கொடுக்கல் வாங்கலில் மட்டும் கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும் பொழுதும் ரொம்ப கவனமாக செல்லுங்கள், தயவுசெய்து வாக்குறுதிகளை மட்டும் யாருக்கும் கொடுக்காதீர்கள். அதுபோலவே முன்ஜாமீன் ஏதும் கொடுக்காதீர். இன்று மாணவச் செல்வங்கள் கூடுதலாக உழைத்துதான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். பாடங்களை நிதானமாகப் படியுங்கள், படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப்பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக  கொடுப்பதை வாராவாரம் தயவு செய்து பழகிக் கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கப் பெற்ற செல்வ செழிப்புடன் வாழலாம்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் நீல நிறம்