கடகம் ராசிக்கு.. தனலாபம் கிடைக்கும்.. மதிப்பும், மரியாதையும் உயரும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று வெளிவட்டார பழக்கத்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொழில் வளர்ச்சி குறித்து அறிந்தவர்கள் விலகிச்செல்வார்கள். தாய்வழி தனலாபம் கிடைக்கும். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். இன்று  சுப விரயச் செலவுகள் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது கவனம் இருக்கட்டும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும். வெளியூர், வெளிநாடு ஆர்டர்கள் உங்கள் கையில் வந்து சேரும். வேலையாட்களின் ஒத்துழைப்பு , கூட்டாளிகளின் ஆதரவும் மனமகிழ்ச்சியை உண்டாக்கிவிடும்.

வாங்கிய வங்கிக் கடன்களை முழுமையாக அடைத்து விடுவீர்கள். கடன் பிரச்சினைகளில் இருந்து உங்களை பார்த்துக் கொள்வீர்கள். இன்று  உடலில் வசீகரத் தன்மை கூடும், காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கும். இன்று மாணவர்கள் பொறுமையாக இருந்து கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அதேபோல தேர்விற்காக தயாராக கொண்டிருக்கும் மாணவர்கள் கொஞ்சம் மனதை அமைதியாக வைத்துக் கொள்வது, கடினமாக உழைத்து கஷ்டப்பட்டு பாடங்களைப் படியுங்கள், படித்ததை  எழுதிப்பாருங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்