கச்சத்தீவை இந்தியா இதுவரை திருப்பிக் கேட்கவில்லை என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் எதிரொலியாக, தமிழக அரசியலில் கச்சத்தீவு விவகாரம் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை அமைச்சர் ஜீவன், கச்சத்தீவை திருப்பித் தருமாறு இந்தியா இதுவரை கேட்கவில்லை.

கச்சத்தீவு என்பது இலங்கையின் ஒரு பகுதி. கச்சத்தீவை இந்தியா திருப்பிக் கேட்டால் இலங்கை தக்க பதிலளிக்கும். கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழ்நாடு பாஜக கூறியிருந்த நிலையில், ஜீவன் தொண்டமான் மறுப்பு தெரிவித்துள்ளார்.