ஓ இதுதான் காரணமா?…. இந்து மத தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

இந்து முன்னணி அமைப்பின் தலைவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா  என்ற அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் தேசிய புலனாய்வு முகமை  அதிகாரிகள் கடந்த 22- ஆம் தேதி பல மாநிலங்களில் உள்ள இந்த அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகள் போன்ற இடங்களில் சோதனை நடத்தினர். இதனையடுத்து 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் . இவர்கள்  கைது செய்யப்பட்டதை கண்டித்து  கேரளாவில் கடந்த 23-ஆம் தேதி கண்டன பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில்  கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் அவற்றின் தலைவர்களின் வீடுகள் மீது பெட்ரோல் கொண்டு வீசப்பட்டது.

இதனால் கடந்த 28-ஆம் தேதி மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக கூறி அவை  இந்தியாவில் செயல்படுவதற்கு தடை விதித்தது. மேலும் இந்த அமைப்புகளின் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று தமிழ்நாட்டில் அமைந்துள்ள பல்வேறு இடங்களில் ஆர்.எஸ். எஸ். அமைப்பினர் ஊர்வலம் நடத்தினர். இதனையடுத்து நவம்பர் 6-ஆம்  தேதி அந்த ஊர்வலத்தை நடத்த சென்னை ஐகோர்ட்டு  அனுமதி அளித்தது.

இந்நிலையில் மத்திய உளவு அமைப்பு  நமது தமிழ்நாடு  உள்ளிட்ட 2 மாநிலங்களில் உள்ள  இந்து முன்னணி அமைப்புகளின் முக்கிய தலைவர்களை  கொள்வதற்கு சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கூறியது. இதனால் 2  மாநிலங்களில் உள்ள இந்து அமைப்புகளின் முக்கிய தலைவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கேரளாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 5 தலைவர்கள்  உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவு அமைப்பு தகவல் பகிர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஓய் பிரிவு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனால் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மேலும்  ஆயுத பூஜை, தசரா திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்ற நிலையில் இந்த அமைப்புகளின் தலைவர்கள் கூடுதல் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இந்து அமைப்புகளின் தலைவர்களுக்கு  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.