ஓவியர் இளையராஜா நம்முடன் வாழ்வார்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்….!!!

பிரபல ஓவியர் இளையராஜா கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 43. இளையராஜாவின் திராவிட பெண்கள் ஓவியங்கள் புகழ் பெற்றவை. கிராமத்து பெண்களை மிக தத்ரூபமாக வரைவதில் சிறந்தவர். மேலும் இவர் இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இவன் திரை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அதே படத்தில் சிறுவயது பார்த்திபன் ஆகவும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மறைந்த ஓவியர் இளையராஜா தனித்துவமிக்க இயல்பான ஓவியங்களால் கவனத்தை ஈர்த்த நுட்பமான ஓவியர் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அவரது மறைவு தன்னை வேதனை அடைய செய்வதாக கூறியுள்ளார். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் தனது இரங்கலை தெரிவித்து அவர், “கலைகளின் வழியாக கலைஞர்கள் காலம் கடந்து நம்மோடு வாழ்வார்” ஓவியர் இளையராஜாவும் வாழ்வார், என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *