ஓலா இ-ஸ்கூட்டர் வாகனங்கள்…. இந்தியாவில் இன்று முதல் அறிமுகம்….!!!!

ஓலா மின்சார இருசக்கர வாகனம் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதன் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் ஓலா இருசக்கர வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது. பிப்ரவரியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட இந்த ஆலையில் ஆறே மாதத்தில் உற்பத்தி தொடங்கியுள்ளது. எஸ் 1, எஸ் 1 புரோ ஆகிய இருவகை வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்படுகின்றன.
எஸ் 1 வகை வாகனத்தில் விலை சுமார் ஒரு லட்ச ரூபாய் இருக்கும் எனவும் மாநிலங்களின் மானியத்தைப் பொறுத்து விலை மேலும் குறையலாம் என்றும் கூறப்படுகிறது. மின்கலத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோ மீட்டர் வரை செல்ல முடியும் என்றும் அதிகபட்சம் மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *