மத்திய அரசு சார்பாக அதிகமான ஓய்வூதியத்தை தேர்வு செய்வதற்கு ஊழியர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்விருப்பத்தை நீங்கள் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை எனில், உங்களுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது.

EPFO சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு வேலை வழங்குனருடன் கூட்டு விருப்ப படிவத்தை நிரப்ப ஆன்லைன் வசதியை வழங்கி உள்ளது. அதிக ஓய்வூதியம் பற்றி பல்வேறு கேள்விகள் இருக்கிறது. கூடுதல் பங்களிப்பின் விருப்பம் எவ்வாறு செயல்படும் மற்றும் அதிகமான ஓய்வூதியத்தை தேர்வு செய்தால் பணம் செலுத்தும் முறை என்னவாக இருக்கும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.