நாடு முழுவதும் ஓய்வூதியதாரர்கள் மாதந்தோறும் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆயுள் சான்றிதழை பெறுவது கட்டாயம். இதற்காக ஓய்வூதியதாரர்கள் சிரமம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டுக்கே வந்து தபால்காரர்கள் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை தரும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
இதற்கான சேவை கட்டணம் 70 ரூபாயாக இருக்கும் நிலையில் இதனை பெற விரும்புபவர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகலாம். இல்லையெனில் postinfo என்ற செயலியை டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் இதற்கான முகாம்கள் நவம்பர் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில் ஓய்வூதியதாரர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.