ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரிடம்…. “12 3/4 லட்ச ரூபாய் மோசடி” போலீஸ் விசாரணை….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற என்.எல்.சி ஊழியரான பெருமாள்(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமாளுக்கும், நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வீட்டு மனைகளை வாங்கி விற்கும் ஏஜென்ட்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் பெருமாள் ஓய்வு பெற்ற போது வந்த பணத்திலிருந்து வீடு வாங்க முடிவு செய்துள்ளார்.

இதற்காக அந்த தம்பதியை அணுகிய போது அவர்கள் வேப்பூர், நெய்வேலி டவுன்ஷிப் உள்ளிட்ட 5 இடங்களில் வீட்டுமனை இருப்பதாக தெரிவித்தனர். இதற்காக பெருமாள் 12 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரூபாயை அந்த தம்பதியிடம் கொடுத்துள்ளார். அவர்கள் இதுவரை வீட்டுமனை வாங்கி கொடுக்காமல் பணத்தை மோசடி செய்துள்ளனர். மேலும் அந்த தம்பதியினர் சொந்த உபயோகத்திற்காக எடுத்துச் சென்ற பெருமாளின் காரையும் திருப்பிக் கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.